கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த ஆஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் இவர் மார்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியை சேர்ந்த ஜோஸ்வா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆஷா ஜோஸ்வாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை தருவதாக மார்த்தாண்டம் அருகே பழைய பெப்சி கம்பெனி பின்புறம் உள்ள தென்னை தோப்பில் வரவழைத்து மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் ஆஷாவை சராமரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று உள்ளான். சத்தம் கேட்கவே பொதுமக்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதல் உதவி சிகிட்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மார்தாண்டம் போலீசார் ஜோஸ்வாவை தேடி வந்த நிலையில்காதலன் விரிகோடு பகுதியில் இரயிலுக்கு அடியில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தலை துண்டாகி தண்டவாளத்தில் கிடந்த ஜோஸ்வாவின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வரும் நிலையில் வெட்டுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.