திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு
முகாமில் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை, நைஜீரியா, பல்கேரியா, இந்தோனேசியா, வங்காள தேசம் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்
முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை தமிழரான சுகந்தன்(35) என்பவர் தன்னை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி கடந்த சில நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். 5வது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.