தமிழக வெள்ள சேதங்களுக்கான காப்பீட்டு தொகை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் – நிர்மலா சீதாராமன் தகவல்..!

3 Min Read

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வெள்ளம் வடிந்ததும் சேதங்களுக்கான காப்பீட்டு தொகை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாட்டில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பொருட்கள், சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், பொருட்சேதம் ஏற்பட்டவர்களின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் ஒரு வருடம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்திருக்கிறது. இதனால் தண்ணீர் தேங்கி வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த தகவல் 18-ம் தேதி காலை எனக்கு கிடைத்தது. அன்று நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தது. நான் அன்று மதியமே உள்துறை மந்திரி சந்தித்து 4 மாவட்டங்களுக்கும் உடனடியாக உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் உடனே மீட்பு படைகளை அனுப்புதல் உள்ளிட்ட உதவிகளை உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒத்துழைத்து களத்தில் இறங்கின.

நிர்மலா சீதாராமன்

உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டு அறைகள் நிலைமையை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. விமானப்படையின் 5 ஹெலிகாப்டர்கள், கடற்படை ஹெலிகாப்டர்கள், கடலோர காவல் படை ஹெலிகாப்டர்கள் 87 முறை சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. இவ்வாறு அனைத்து மீட்பு படைகள் மூலமாகவும் டிசம்பர் 21-ம் தேதி வரை 42,290 பேர் மீட்கப்பட்டனர். உடனே களத்தில் இறங்கியதால் நிறைய பேரை மீட்க முடிந்தது. ஆனாலும் இந்த பேரிடரில் 31 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இது வருத்தப்படக் கூடிய விஷயம். பொதுவாக அவசர நிலைமை இயல்புக்கு வந்த பிறகு மத்திய குழு செல்லும். ஆனால் இந்த விஷயத்தில் 19 ஆம் தேதி மாலை மத்திய அங்கு சென்று விட்டது. முன்னதாக 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மத்திய குழு சென்னையில் இருந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் 73 ஆயிரத்து 584 ஹெலிகாப்டரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 35 ஆயிரத்து 796 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் சேதம் அடைந்திருக்கின்றன. மாவட்டங்களில் வெள்ளம் வடிந்ததும், சேதங்களுக்கான காப்பீடு தொகையை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். முன்னதாக இந்திய பொது காப்பீடு கவுன்சிலின் கீழ் உள்ள 19 நிறுவனங்கள் கடந்த 20 மற்றும் 21-ம் தேதிகளில் அம்பத்தூரில் சிறப்பு முகாம் நடத்தினர்.

நிர்மலா சீதாராமன்

இதில் மிக்ஜம் புயலில் பாதிக்கப்பட்ட தொழில்துறையினருக்கு முகாமிலேயே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டன. அதேபோல இந்த மாவட்டங்களிலும் சேதங்களுக்கான காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு தனது பங்கு உரிய நேரத்துக்கு வழங்க வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ரூபாய் 813.15 கோடி தமிழ்நாடு அரசிடம் இருந்தது. இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் பங்கு ரூபாய் 900 கோடியில் முதல் தவணை ரூபாய் 450 கோடி மிக்ஜம் புயல் வருவதற்கு முன்பே மாநிலத்திற்கு விடுவித்து விட்டோம். 2-வது தவணையை 4 மாவட்டங்களில் மழை வருவதற்கு முன்பே அதாவது கடந்த 12-ம் தேதியே கொடுத்து விட்டோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Share This Article

Leave a Reply