பட்டுக்கோட்டையில் லாரி மோதி சிறப்பு உதவி ஆய்வாளர் பலி , குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

1 Min Read
  • தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையம் ஆகிய காவல் நிலைய சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் உளவுத்துறை சிறப்பு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் செந்தில்குமார்.

- Advertisement -
Ad imageAd image

இவர் நேற்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தஞ்சை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக வருகை தந்ததை ஒட்டி தஞ்சாவூருக்கு பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டு மீண்டும் பட்டுக்கோட்டை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது கரம்பயம் அருகே பின்னால் வந்த தேங்காய் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக திடீரென செந்தில்குமாரின் இரு சக்கர வாகனத்தில் மோதியது.

இதில் செந்தில்குமார் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/farmers-journey-to-build-a-dam-in-rasi-sand-area-pr-pandian-interviewed-in-thanjavur-that-he-will-definitely-win/

மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுற்று அவரது உடல் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டநிலையில் அங்கு அவரது உடலுக்கு தஞ்சை மாவட்ட எஸ்பி ஆசிஸ் ரானுவத் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தஞ்சை சாலையில் உள்ள மின் மயானத்தில் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Share This Article

Leave a Reply