கடலூர் மாவட்டம், ஆவினங்குடி அருகே உள்ள தொளார் கிராம பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 50) இவர்களுக்கு திருமண ஆகி இரண்டு மகன், இரண்டு மகள் உள்ளனர். இந்த நிலையில், இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், மகன்கள் சேவாக், செல்வமணி ஆகிய இரண்டு பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ராஜேந்திரன் அவரது மகன் சேவாக், செல்வமணி ஆகிய இரண்டு பேரும் வெளியூரில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து, கஸ்தூரியம், சேவாக்கும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு சேவாக் தனது தாய் கஸ்தூரி காணவில்லை என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் சேவாக்கின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் சேவாக்கிடம் கேட்டபோது முன்னுக்கு பின்னாக பதில் கூறியுள்ளார். பின்னர் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் ஆவினங்குடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவினங்குடி போலீசார் சேவாக் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது வீட்டின் உள்ளே துர்நாற்றம் வீசியது. பின்னர் வீட்டின் உள்ளே சடலம் புதைக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. மேலும் வீட்டின் அருகில் ரத்த கரை படிந்த பாய் கிடந்ததால் சேவாக்கை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேவாக் மது மற்றும் கஞ்சா குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதும், சாலையில் நிற்கும் வாகனங்களில் பெட்ரோல் திருடி அதை சுவாசித்து போதை ஏற்றும் பழக்கம் உடையவர் என்பதும் கூறப்படுகிறது.

போதை பழக்கத்திற்காக பணம் தராததால் தாயை கத்தியால் வெட்டி கொலை செய்து வீட்டில் புதைத்துள்ளதாக கூறப்படுகின்றது என விசாராணையில் தெரியவந்தது. இதனை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீட்டில் கஸ்தூரி புதைக்கப்பட்டுள்ள இடத்தில் தோண்டி அவரது உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, மேலும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.