பொருளாதாரத் தலைமை ஏற்பதில் பெண்கள் முன்னணியில் இருந்தால் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் 20 அறிவிக்கை ஜூன் 15-ந் தேதி சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற ‘மகளிர் 20’ உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் வெளியிடப்பட்டது. மகளிர் 20 2023-ன் தலைவரும், சங்கீத நாடக அகாடமியின் தலைவருமான டாக்டர் சந்தியா புரேச்சா, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் குழுவின் உறுப்பினரும், மகளிர் 20 2023 அறிவிக்கை வரைவுக் குழுவின் தலைவருமான டாக்டர் ஷமிக்கா ரவி, ஐ.நா.வுக்கான இந்திய உறைவிட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஷோம்பி ஷார்ப், ஜி20 ஷெர்பா (தலைவர்) திரு. அமிதாப் காந்த் தொழிலதிபரும், மகளிர் 20 தலைமை ஒருங்கிணைப்பாளருமான திருமிகு. தாரித்ரி பட்நாயக் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி சுபின் இரானி சிறப்புரையாற்றினார்.
மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி, தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபலிபுரத்திற்கு மகளிர் 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள பிரதிநிதிகளை வரவேற்றார். இந்தியாவின் அறநூல்களில் ஒன்றான தமிழ்மொழியின் இலக்கியமான திருக்குறளிலிருந்து “அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்” என்னும் குறளை அவர் மேற்கோள் காட்டினார். ஒரு லட்சத்தியத்துடன் கூடிய, அதே சமயம் சாதிக்கக் கூடிய அறிவிக்கையை வகுத்த வரைவுக்குழுவை அவர் பாராட்டினார். மகளிர் 20 மேற்கொண்டுள்ள 3 முக்கிய அம்சங்களை அறிவிக்கை உள்ளடக்கியுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் மகளிர் 20 துவக்கக் கூட்டத்தில் தாம் கூறியதை நினைவுகூர்ந்த அவர், பருவநிலை மாற்றத்திற்கு இடையே மகளிர் மற்றும் குழந்தைகளை மையப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கை பருவநிலை மாற்றத்தால் வெளியேறிய அனைத்து மக்களில் 80% பேர் பெண்கள் என்று கூறியுள்ளது. பருவநிலை மாற்றம் எவ்வாறு பெண்களையும், குழந்தைகளையும், சுகாதாரக் கேடு, நோயால் ஏற்படும் அபாயங்கள் பாதிக்கின்றன என்பதை அவர் விளக்கினார். பெண்களுக்கும், பருவநிலை மாற்றத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கிய அமைச்சர், மகளிர் தலைமையிலான வளர்ச்சி அவசியம் என்று வலியுறுத்தினார். “எல்லா மனித இனமும் பேரழிவிற்கு இட்டுச் செல்வதை உறுதி செய்வதை விட, இப்போது நாம் பேரழிவை எதிர்கொள்ளது நல்லது” என்று அவர் கூறினார்.
மகளிர் 20 உச்சி மாநாட்டின் முன்னுரிமை அம்சமான பாலின டிஜிட்டல் பிளவை நிரப்புவது குறித்து குறிப்பிட்ட அவர், பாலினம் சார்ந்த குறியீட்டு தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பப் பொருட்கள் குறித்த உரையாடலை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். மகளிருக்கென பிரத்யேகமான 300 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வளம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பொருளாதார வாய்ப்புகளைக் கொண்ட பொருளாதார சேவைகள் பிரிவை பெண்களுக்காகவே உருவாக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
நிர்வாகத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வளமிக்க நாடுகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டுமென்று வலியுறுத்திய அமைச்சர், தொழில்நுட்பத்தை அணுகுவதில் மொழித் தடையை நாம் உடைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பாலினப் பார்வை மூலம் செயற்கை நுண்ணறிவைக் காண வேண்டுமென்று கேட்டுக் கொண்ட அமைச்சர், உலகம் முழுவதும் பெண்களுக்காக செயற்கை நுண்ணறிவு வழங்குவது என்ன? என்பது குறித்து விவாதிக்க வேண்டுமென்றும், தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார். ஜி20 ஷெர்பாவின் கருத்துக்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு ஆண்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
பொருளாதார தலைமை ஏற்பதில் பெண்கள் முன்னணியில் இருந்தால் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார். வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல் செயலிலும் மாற்றத்தைக் காட்ட வேண்டிய தருணம் வந்து விட்டதாக அவர் கூறினார். இந்த வகையில் மகளிர் 20 அமைப்பின் செயல் சார்ந்த அணுகுமுறையை அவர் பாராட்டினார். வகுக்கப்பட்டுள்ள அறிவிக்கை குறித்து நம்பிக்கை தெரிவித்த அவர், இது வலிமையானது மட்டுமல்லாமல் அடையக் கூடியதுமாகும் என்று கூறினார். இந்த அறிவிக்கை ஜி20 அமைப்பை எதிர்காலத்திற்கு தயாராக்கும் ஒரு கருவி என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச பிரதிநிதிகளை வரவேற்ற டாக்டர் சந்தியா புரேச்சா மகளிர் 20 இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொண்டார். மகளிர் தலைமையிலான வளர்ச்சி குறித்த தொகுப்பு, சுகாதாரம் மற்றும் பாலின இடைவெளி குறித்த வெள்ளை அறிக்கை, மகளிர் தொழில் முனைவோர் உள்ளிட்ட மகளிர் 20 இந்தியா வெளியிட்டுள்ள அறிவுசார் பொருட்கள் குறித்து அவர் விளக்கினார். இந்திய மகளிர் 20 உச்சி மாநாடு மக்கள் பங்களிப்பு குறித்து கவனம் செலுத்தியிருப்பதாக டாக்டர் புரேச்சா கூறினார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும், அறிவிக்கை வரைவுக்குழுவின் தலைவருமான டாக்டர் ஷமிக்கா ரவி, அறிவிக்கையின் முக்கிய முன்னுரிமை அம்சங்கள் குறித்து விளக்கினார். ஒவ்வொரு நாடும் தேசிய பாலின உத்தியை உருவாக்கி மேம்படுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஐ.நா.வுக்கான இந்திய உறைவிட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஷோம்பி ஷார்ப், நாடாளுமன்றங்களில் அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். கொள்கை வகுக்கும் அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சுகாதாரத்தில் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டுமென்றும், நிர்வாகத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவதை ஆதரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜி20 ஷெர்பா (தலைவர்) திரு. அமிதாப் காந்த் தமது உரையில், உலகம் முழுவதும் பெண்களுக்கு அதிகாரமளிக்க இடையூறாக உள்ள அனைத்துத் தடைகளையும் அகற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். முற்போக்குப் பார்வை கொண்ட மகளிர் 20 அறிவிக்கை 2023 குறித்து பாராட்டிய அவர், தரவுகளின் அடிப்படையில் தேசிய பாலின உத்தியை வகுக்க வேண்டுமென்று யோசனை தெரிவித்தார். அடுத்த 10 ஆண்டுக்குள் பாலின சமத்துவத்தை அடையும் வகையில் மகளிர் பொருளாதார அதிகாரமளித்தல் பற்றிய தீவிரமான பொருளாதார கொள்கைகளை வகுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மகளிர் 20 அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை ஜி20 தலைமைத்துவம் பிரதிபலிப்பது உறுதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து மகளிர் 20 அமைப்பு செயல்படுவதை எதிர்நோக்குவதாக அமைச்சர் கூறினார்.
மகளிர் 20 அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தொழிலதிபருமான திருமிகு தாரித்ரி பட்நாயக் நன்றி கூறினார். கடந்த 7 மாதங்களில் இந்தியா முழுவதும் மகளிர் 20 ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் குறித்து அவர் விளக்கினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.