தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் ரேசன் கடையில் இருந்து டிராக்டர், சுமோ மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக சிசிடிவி விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்து நாள்தோறும் ரேசன் கடையில் கடத்தப்படும் ரேசன் அரிசியைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறுகிறது அரசு இயந்திரம். இந்தக் கடத்தலில் ரேசன் அரிசி கடத்தல் கும்பல் சேர்ந்திருப்பது கூடுதல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கோடியே 97 லட்சம் பேர் ரேசன் அட்டையை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் அரசின் இலவச ரேசன் அரிசியை வாங்குகின்றனர்.

ரேசன் கடைகளில் வழங்கப்படும் இந்தப் பொருட்களை மையமாக வைத்து மாஃபியா கும்பல் ஒன்று இயங்கி வருகிறது. இவர்கள் மூலம் தினமும் பல்லாயிரம் கிலோ ரேசன் அரிசி மற்றும் பருப்பு வகைகள் சர்வசாதாரணமாக கடத்தப்படுகிறது. இவர்கள் மூலம் மட்டும் தினமும் பத்தாயிரம் கிலோ வரையில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.
முன்பெல்லாம் லாரிகளில் ரேசன் அரிசி கடத்துவதாக செய்திகள் வரும். கண்டெய்னர்களிலும் கடத்தி வந்தார்கள். அவற்றில் எல்லாம் சோதனை நடைமுறைகள் அதிகரிக்கப்பட்டதும் சத்தமே இல்லாமல், ஆட்கள் மூலம் சிறிது சிறிதாக கடத்துகிறார்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் இருந்து நள்ளிரவில் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி விடியோ காட்சிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கணபதி என்பவர் வெளியிட்டதாக ரேசன் அரிசி கடத்தல் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கணபதி கரிவலம்வந்தநல்லுர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஒருதலைபட்சமாக விசாரiணை செய்து சமரசம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தப்படும் சிசிடிவி விடியோ காட்சிகள் வெளியிட்டும் எதுவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேசன் கடைகளில் ரேசன் அரிசி கடத்தல் கும்பலுக்கு துணை போகும் கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் மீது மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.