வங்கதேச நாடாளுமன்ற தேர்தலை முக்கிய எதிர்க்கட்சி புறக்கணித்த நிலையில் வாக்குசாவடி மையங்களில் குறைவான அளவிலே மக்கள் காணப்பட்டனர். வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் 40% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிகிறது.
வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன்பாக பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வங்கதேசத்தில் நடந்த பொதுத்தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான, வங்கதேசம் தேசியவாத கட்சி புறக்கணித்த நிலையில், ஓட்டுப் பதிவு மிகவும் மந்தமாகவே நடந்தது.

அதே நேரத்தில் ஷேக் ஹசீனா, தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராக உள்ளார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஆவாமி லீக் கட்சித் தலைவரான ஷேக் ஹசீனா, பிரதமராக உள்ளார். பார்லிமென்டின், 300 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமரான கலிதா ஜியா, ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவர் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு 4 மணிக்கு முடிவடைந்தது.
அதிக ஆர்வம் இல்லாததால் குறைவான அளவிலான மக்கள் தான் வாக்களிக்க வந்தனர். மாலை 3 மணி நிலவரப்படி 27.15% என பதிவாகியது. 4 மணி வரை 40 % வாக்கு பதிவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. 2018 தேர்தலில் 80% பதிவாகியது.வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி, தேர்தலை நேர்மையாக நடத்தும்படி, கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி வலியுறுத்தியது.
அது ஏற்கப்படாததால், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் நடந்தன. வேட்பாளர் ஒருவர் இறந்ததால், ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள, 299 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. முக்கிய எதிர்க்கட்சியின் புறக்கணிப்பால், ஓட்டு அளிப்பதில், வாக்காளர்களுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. வன்முறை நடக்கலாம் என்ற பயத்தில், பலர் ஓட்டு அளிக்கவில்லை.

அனைத்து இடங்களுக்கும் முடிவுகள் இன்று காலைக்குள் அறிவிக்கப்படும். தேர்தலில் வாக்களித்த பின்னர் பிரதமர், ஷேக் ஹசீனா கூறுகையில்,‘‘ பி.என்.பி கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சிகள் வன்முறையில் ஈடுபட்ட போதும் மக்கள் வாக்களிப்பதற்கான ஒரு சூழ்நிலையை அரசு உருவாக்கியுள்ளது என்றார். நேற்று மாலை நிலவரப்படி, இந்தத் தேர்தலில், 40 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, வங்கதேச தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
கடந்த, 2018 தேர்தலில், 80 சதவீத ஓட்டுகள் பதிவானது. ஒரு சில சம்பவங்களைத் தவிர, ஓட்டுப் பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்ததாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இந்நிலையில், ஷேக் ஹசீனா, தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, வங்கதேச தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆளும் ஆவாமி லீக் கட்சி 50 சதவீதத்திற்கும் அதிகமான சீட்களை வென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.