2023, அக்டோபர் 3 அன்று இரவு லோனாக்கில் ஏரி உடைந்து ஏற்பட்ட எதிர்பாராத இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்கிம் அரசின் நிவாரணப் பணிகளுக்காக தேசிய நீர் மின் கழகம் சிக்கிம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நன்கொடை அளித்துள்ளது.
2023, அக்டோபர் 10 அன்று, எல் கே திரிபாதி, நிர்வாக இயக்குநர் (பிராந்தியம் -சிலிகுரி) சிஆர் தாஸ், டீஸ்டா -V மின் நிலைய முதன்மை அதிகாரி லென்தூப் லெப்சா, டீஸ்டா -IV நீர் திட்ட முதன்மை அதிகாரி, கேங்டாக்கில் உள்ள டீஸ்டா–VI உயர் அதிகாரிகள் ஆகியோர் இதற்கான நிதியை சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங்கிடம் வழங்கினர்.

2023 அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதி இரவு வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரி உடைந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் டீஸ்டா ஆற்றில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளத்தின் விளைவாக, சிக்கிமின் டீஸ்டா நதி பள்ளத்தாக்கில் பாலங்கள், நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை -10-ன் பகுதிகள், சிறிய நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்தன.

மேலும் இந்த நிதி உதவியின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசின் நிவாரண முயற்சிகளுக்கு முழு ஆதரவை வழங்க தேசிய நீர் மின் கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதில் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. என்.எச்.பி.சி ஏற்கனவே மாநில நிர்வாகத்துடன் ஒருங்கிணைத்து திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.