கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும் , துணை முதலமைச்சராக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமாரும் பதவி ஏற்றுக்கொண்டனர் .
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மதம் 10 ம் தேதி அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது . இந்த தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவானது , பதிவான வாக்குகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டது .

13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களையும் , பாஜக 66 இடங்களையும் , மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களையும் , கல்யாண ராஜ பிரகதி பக்சா மற்றும் சர்வோதயா கர்நாடக் பக்சா ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர் .
சுயேச்சைகள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர் ஆட்சி அமைக்க 113 இடங்களே வென்றால் போதும் என்ற நிலையில் , காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது .

தனி பெரும்பான்மையில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றினால் எனினும் முதல்வர் , துணை முதலவர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க இழுபறி நீடித்தது .
முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முடிவை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது . சுமார் மூன்று நாட்களுக்குமேல் நடத்தப்பட்ட பல்வேறுகட்ட கலந்தாய்வு கூட்டாட்சிற்கு பிறகு இறுதியாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , பொது செயலாளர் கேசி வேணுகோபாலுடன் இறுதி கட்ட ஆலசோனை நடத்தப்பட்டது .
இதில் சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராகவும் , டிகே சிவகுமாரை துணை முதல்வர் வேட்பாளராகவும் இறுதி செய்யபட்டனர் .
இன்னிலையில் இன்று மே 20 ஆம் தேதி கர்நாடகா முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலமாக பெங்களூருவில் உள்ள கண்டீவரா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்றன . பகல் 12:30 மணிக்கு முதலமைச்சராக சீதாராமைய பதவி ஏற்றுக்கொண்டார் .
அவருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார் , இவரை தொடர்ந்து துணை முதலமைச்சராக டி கே சிவகுமார் பதவி ஏற்றுக்கொண்டார் . முதலமைச்சர் சீதாராமை மற்றும் துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாருக்கு ஆளுநர் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வினை தொடர்ந்து அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக பதியேற்றுக்கொள்ளும் ஜி.பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஸ் ஜர்கிஹோலி, பிரியங் கார்கே, ராமலிங்க ரெட்டி, சமீர் அகமது உள்ளிட்ட 8 பேருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்து ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார் .
கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்க, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமலஹாசன் , பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ,ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் , சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் , இமாச்சல மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங்சுகு , பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிஅமைப்பதை காண ஆயிரக்கணக்கான மக்கள் விழாவில் கலந்து கொண்டு உற்சாகமூட்டினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.