Vellore DMK Minister Durai Murugan வீட்டருகே துப்பாக்கி சூடு , ஒருவர் கைது !

குண்டுபட்ட காயத்தை கம்பி குத்தியதாக அருள் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது

2 Min Read

வேலூர் : தகராறில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம், காவல் துறை விசாரணை. கம்பி குத்தியதாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட துப்பாக்கி குண்டு.

- Advertisement -
Ad imageAd image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூரை சேர்ந்தவர் பைனான்ஸ் தொழில் செய்யும் அருள் சுடர் (49) இவர் நேற்று முன்தினம் (11.03.2025) இரவு 9.30 மணி அளவில் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் திருமணம் அருகில் (அமைச்சர் துரைமுருகனின் வீட்டு தெருவுக்கு பின்புற தெரு) பைனான்ஸ் வசூலிக்க சென்ற போது ஏற்பட்ட தகராறில் வஞ்சூரை சேர்ந்த ஜான் (52) என்பவரால் கம்பியால் குத்தப்பட்டதாக வேலூரில் உள்ள தனியார் (நறுவீ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஒரு கை துப்பாக்கி குண்டினை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம்  எடுத்துள்ளனர்.

அப்போதுதான் குண்டுபட்ட காயத்தை கம்பி குத்தியதாக அருள் நடனமாடியது கண்டுபிடிக்கப்பட்டது . துப்பாக்கி குண்டினை கண்டு அதிர்ச்சி அடைந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .

தகவலின் பேரில் மருத்துவமனைக்கு வந்த விருதம்பட்டு காவல் துறை அதிகாரிகள் அகற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்து மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் .

பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அருள் சுடரின் உறவினர் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் துப்பாக்கி சூடு குறித்து வழக்கு பதிவு செய்த விருதம்பட்டு காவல் துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து வேலூர்  ADSP க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ADSP தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் குண்டு அடி பட்டவரும், துப்பாக்கியால் சுட்ட இருவருமே நண்பர்கள் என்றும் தொழில் செய்வதற்க்காக ஒரே வீட்டை வாடகை எடுத்து தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு ஏற்பட்ட தொழில் போட்டி  காரணமாக இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல் துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

Leave a Reply