சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஆடு மேய்க்க சென்ற இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு. தனியார் மருத்துவமனையில் அனுமதி. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்று போலீசார் விசாரணை. ஆடு மேய்க்க சென்ற இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கரிய கோவில் அருகே உள்ள வேலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் ராஜ். இவரது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு மகன் உள்ள நிலையில், மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில், மேலும் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். ஆட்டிற்கு தேவையான உணவுக்காக தழை, செடி கொடிகளை வெட்டுவதற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

அப்பொழுது வனப்பகுதிக்குள் திடீரென துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுள்ளது. அப்பொழுது வனபகுதியில் துப்பாக்கிச் சுட்டதில் ராஜ்யின் வலது காலில் குண்டு பாய்ந்துள்ளது. இதில் அப்பகுதியில் சத்தம் போட்டு, கீழே விழுந்த ராஜியின் உடல், சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் நுழைந்த ராஜ்யின் மாமன், மகன் ராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜ்யை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வாழப்பாடி காவல் உதவி ஆய்வாளர் கென்னடி மற்றும் ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து யாரேனும் மான் வேட்டைக்கு வனப்பகுதிக்குள் சென்று உள்ளனர், இல்லை இவருக்கு முன் விரோதம் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு மேய்க்க சென்றவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணம் என்றும், அவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.