தரமில்லாத கட்டுமான பணி உடைந்த ஏரி மதகு கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?

2 Min Read
மதகு உடைந்தது

கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் விட்டு, விட்டு லேசான மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்தில் ஏரி மதகு உடைந்து நீர் வெளியேறியது. இதனால் இந்த பகுதியில் பயிரிடப்பட்ட 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம். ரூபாய் 65 லட்சம் செலவில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் மதகு உடைந்தது.ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.

- Advertisement -
Ad imageAd image

 

நீரில் மூழ்கிய பயிர்

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே பெரும்பாக்கம் ஏரி இந்த பகுதியின் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.கடந்த காலங்களில் பெய்த மழை நீரை சேகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்ப்பட்டு வந்தது.போதிய நீர் இல்லாததாலும் மதகு பழுதடைந்த நிலையில் அதை சீரமைக்க இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மதகு சீரமைக்கப்பட்டது.இந்த நிலையில் தான் மதகு உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறியது.

இந்த ஏரி நீர்த்தேக்கம் சுமார் 2500 ஏக்கர் நீர் பாசனம் பெறும். பெரும்பாக்கம், தோகை பாடி, வெங்கடேசபுரம், கோனூர் உள்ளிட்ட கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்தது இந்த பெரும்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் மதகு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் சீரமைக்கப்பட்டது. ரூபாய் 65 லட்சம் செலவில் புதிதாக சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களே பெய்த மழை நீர் தேங்கி இருந்த நிலையில் திடீரென இன்று மாலை ஏரி மதகு உடைந்தது. தரம் இல்லாத கட்டிடப் பணியால்தான் மதகு உடைந்ததாக அந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உடைப்பு ஏற்பட்ட மதகு

இந்த மதகு உடைப்பு ஏற்பட்டதனால் தண்ணீர் வெளியேறி அந்தப் பகுதியில் சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. மதகு சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் முறையாக மதகு அமைக்காததால் தான் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது எனவே அவரது ஒப்பந்தத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இது போன்ர தரமில்லாத பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை கண்டறிந்து அவர்கள் ஒப்பந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர்.பருவ மழை இந்த ஆண்டு இயல்பை விட குறைந்த நிலையில் தேக்கி வைத்திருந்த நிலையில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேரியது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply