குரங்கு கடித்ததில் படுகாயம் முற்ற ஆட்டோ ஓட்டுனர், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 10 தையல் போடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் வட்டம் பண்டாரவாடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரஃபி வயது 38. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக ஆட்டோ ஒன்றை வைத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் பண்டாரவாடையில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றுக் கொண்டு கும்பகோணம் பெரிய கடைவீதி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது பயணிகள் கடைக்கு போகலாம் என்று ஆட்டோ ஒட்டுனரிடம் கூறி விட்டு அங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்க சென்றதால், ஆட்டோ ஓட்டுனர் அருகில் ஓரமாக ஆட்டோவை நிறுத்தி வைத்து விட்டு, சற்று தூரத்தில் காத்திருந்த போது, திடிரென்று எதிர்பாராத விதமாக அங்கு குறங்குகள் அதிகமாக காணப்பட்டதால் அந்த கூட்டத்தில் வந்த குரங்கு ஒன்று இவரது ஆட்டோவில் ஏறி சென்று அமர்ந்துள்ளது.

அதனை தொடர்ந்து அவர், ஆட்டோவில் ஏறிய குரங்கை விரட்டிய போது, ஆத்திரம் அடைந்த குரங்கு கண் இமைக்கும் நேரத்தில் முகம்மது ரஃபியின் கை, தோள்பட்டை, முதுகு என பல இடங்களில் குறங்கு கடித்து காயப்படுத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முகம்மது ரஃபி அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அவர், உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குறங்கு கடித்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டத்தால் 10 -க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ள நிலையில், அந்த மருத்துவமனையில் உள்நோயாளியாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கும்பகோணம் மாநகராட்சியின் முக்கிய பகுதியான பெரிய கடைவீதி மற்றும் உச்சி பிள்ளையார் கோவில் பகுதிகளில் தற்போது குரங்குகள் அதிகமாக நடமாட்டம் காணப்படுவதால் குரங்குகளால் பொதுமக்களுக்கு ஆபத்துகள் மற்றும் சாலை விபத்துக்கள் ஏற்படும் முன்னரே, மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களை அச்சுறுத்தி காயப்படுத்தும் வகையில் இருப்பதால் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 60 வயது மூதாட்டி விஜயலட்சுமி என்பவர் குரங்கு கடித்து படுகாயம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் அதேபோன்று ஆட்டோ ஓட்டுநரை குரங்கு கடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.