மேற்கு ஜப்பானில் உள்ள புகுயாமா நகரம் ஒரு பூனையை கண்டு அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் அந்த பூனை ஏதும் செய்து விடுமோ என்ற பயம் இல்லை. அந்த பூனை மீது ஒட்டியிருக்கும் ரசாயனம் தான்.
ஒரு தொழிற்சாலையின் விஷத்தன்மை மிக்க ரசாயனம் இருந்த தொட்டியில் இந்த பூனை விழுந்தது. அதன்பின் அது அந்த பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதனிடமிருந்து விலகி இருக்குமாறு அந்த பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி, ரசாயன தொட்டியில் இருந்து மஞ்சள் காலடிச் சுவடுகள் வெளியே செல்வதை கண்டிருக்கிறார். அதன் பிறகே இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
அங்கு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்த போது, ஒரு பூனை தப்பி ஓடுவதை காண முடிந்தது.

புகுயாமாவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை இந்த பூனையிடம் இருந்து விலகி இருக்குமாறும், அது எங்கேனும் தென்பட்டால் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் கேட்டு கொண்டுள்ளனர்.
ஒரு தொழிலாளி, ரசாயனத் தொட்டியில் இருந்து மஞ்சள் காலடி சுவடுகள் வெளியே செல்வதை கண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ரசாயனத்தில் தான் இந்த பூனை விழுந்துள்ளது.

‘நமுரா முலாம் பூசும் புகுயாமா தொழிற்சாலை’ என்ற இடத்தில் நேற்று முன்தினம் (திங்கள், மார்ச் 11) பணிக்கு வந்த போது ஒரு ஊழியர் பூனையின் காலடி தடங்களை கண்டறிந்ததாக ஆசாஹி செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
புகுயாமா நகரின் சுற்றுச்சூழல் குழு, ‘அசாதாரணமாக தோன்றும் பூனைகளை’ பொதுமக்கள் தொட வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறது. ஆனால் இந்த சம்பவத்தின் விளைவாக அந்த பூனை இறந்திருக்கக்கூடும் என்றும் கூறியது.
Leave a Reply
You must be logged in to post a comment.