நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக இலங்கை அணியின் கேப்டனும், ஆல் ரவுண்டருமான ஷனகாவை குஜராத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் குஜராத் அணியின் பலம் பலமடங்கு மேலும் அதிகரித்துள்ளது. இவர் நிச்சயம் இம்பேக்ட் பிளேயராக களமிறங்குவார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.எதிபார்கவும் செய்கின்றனர்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். வில்லியம்சனின் ஆட்டம், அகமதாபாத் மைதானத்தில் நிச்சயம் எடுபடும் என்று முன் திட்டத்தோடு குஜராத் அணி வில்லியம்சனை மினி ஏலத்தில் வாங்கியது. இதனைத் தொடர்ந்து 16வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்காக வில்லியம்சன் களமிறக்கப்பட்டார்.

இந்தப் போட்டியில் சிக்சரை தடுக்க முயன்றபோது, கீழே விழுந்ததில் வலது கால்முட்டியில் கேன் வில்லியம்சனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து பார்த்ததில் காயம் குணமடைய நீண்ட நாட்களாகும் என்பதால், ஐபிஎல் தொடரில் இருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று வில்லியம்சன் சொந்த ஊருக்கு திரும்பினார். வலது காலில் கட்டு போட்ட நிலையில் கம்பூன்றிய படி அவர் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.இது ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடியோவில் கேன் வில்லியம்சன் பேசுகையில், தற்போது காலில் வலி அதிகமாக இல்லை. துரதிர்ஷ்டவசமாக இது குறுகிய கால பயணமாக அமைந்துவிட்டது. குறைந்த நாட்களே இருந்தாலும் குஜராத் அணியுடன் உற்சாகமாக நேரத்தை செலவிட்டேன். அணியினரை தவறவிடுவது வேதனை அளிக்கிறது. இந்த சீசனில் அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். இதனால் கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக யார் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் இலங்கை அணியின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் ஷனகாவை குஜராத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அண்மையில் இந்தியாவில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷனகா அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி இருந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் ஷனகா ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த அணியும் அவரை ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை. இந்த நிலையில் கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக ஷனகாவை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆல் ரவுண்டரான ஷனகா குஜராத் அணியில் இணைந்திருப்பது அந்த அணிக்கு மேலும் பலத்தை அதிகரித்துள்ளது.என்ன நடக்கிறது பார்க்கலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.