தேனியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சிவசேனா கட்சியினர்

1 Min Read
சிவசேனா தொண்டர்கள்

கள்ளக்குறிச்சியில் விஷம் சாராயம் அருந்தி 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக அரசை கண்டித்து தேனியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற சிவசேனா கட்சியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி தற்போது வரை 55 பேர் உயிரிழந்த நிலையில் பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை பதவி விலக கோரி அவரது உருவ பொம்மையை எரிக்கும் என்றதால் பரபரப்பு ஏற்பட்டது தேனி அல்லிநகரம் பகுதியில் சிவசேனா கட்சியினர் தமிழக அரசை கண்டித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பியும் மு. க ஸ்டாலினின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

கைது

பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து உருவ பொம்மையை பறிமுதல் செய்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர் தொடர்ந்து பதவி விலகு பதவி விலகு முதலமைச்சரே பதவி விலகு என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அவர்களை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Share This Article

Leave a Reply