மிக நீண்ட நாட்களாக சிறையில் இருந்தவர்களில் சாதன் ஒருவர்.கடந்த 32 ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்துள்ளார்.இந்திய முன்னாள் பிரதமர் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்க்கு வந்திருந்த போது அங்கே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் நன்னடத்தை பேரில் நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்த காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் விடுதலை செய்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.அவரை தொடர்ந்து நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய ஆறு பேர் நன்னடத்தை மற்றும் சிறை தண்டனை காலத்தை கருத்தில் கொண்டு உச்சமன்றத்தால்
விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன் ஆகிய இருவரும் தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவரும் இலங்கையை சேர்ம்தவர்கள் என்பதால் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதே
முகாமில் உள்ள முருகனை அவரது மனைவி நளினி அடிக்கடி சந்தித்து செல்கிறார். அவர் தமிழ் நாட்டை சார்ந்தவர் என்பதால் அவர் தமிழகத்தில் அவர் உறவினர்களுடன் தங்கியிருக்கிறார்.அதனால் அவரது கணவரை அவர் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சாந்தன்
தன்னை இலங்கைக்கு வர அனுமதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தன் தாய் முதுமையான நிலையில் உள்ளார் கடந்த 32 ஆண்டுகளாக அவரை காண முடியவில்லை அவருடைய முதுமை காலத்தில் அவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு அந்த கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.கருனை அடிப்படையில் தன்னை இலங்கையில் அனுமதிக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.தனக்கும் வயது அதிமாகிக்கொண்டே செல்வதால் தான் தன்னுடைய தாயை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் அவருக்கு அனுமதி கிடைத்தால் அவர் இலங்கைக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.இலங்கை அரசு தான் முடுவு செய்ய வேண்டும்.இலங்கை அரசு ஒப்புதல் அளித்தால் சாந்தன் இலங்கைக்கு செல்ல வாய்ப்பிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.