ஜாமீனில் வெளியே வந்த மைவி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன்..!

2 Min Read

ஜாமீனில் வெளியே வந்த மைவி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன், தலைவர் is back என்ற தலைப்பில் தனது யூடியூப் சேனலில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த மைவி3 ஆட்ஸ் என்ற நிறுவனம் நடந்து வருகிறது. அதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் MD சக்தி் ஆனந்தன் மீது அண்மையில், சிலர் மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

போலீசார் சக்தி ஆன்ந்தனை கைது செய்தனர்

இந்த நிலையில் தன் மீதும், மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீதும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, உரிமையாளர் சக்தி ஆனந்தன் தனது நிறுவன ஊழியர்கள், மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி போராட்டம் நடத்தினார்.

போலீசார் சக்தி ஆன்ந்தனை கைது செய்தனர்

அப்போது ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அவரிடம் மனுவை பெற்ற பிறகும், காவல் ஆணையர் வர வேண்டும் என 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போக போலீசார் அறிவுறுத்திய போதும் கலைந்து போகாமல், காவல் ஆணையரை சந்திக்காமல் போக மாட்டோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த மைவி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன்

சக்தி ஆனந்தை அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். பின்பு நிறுவனரை தொடர்ந்து மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மண்டல இயக்குநர்கள் 5 பேர், அனுமதியின்றி கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட 4 பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

மைவி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன்

மைவி3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தை ஒரு நாள் மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து, மத்திய சிறையில் அடைத்தனர். சக்தி ஆனந்தன் தரப்பில் ஜாமீன் கேட்டு நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்திரவிட்டார்.

யூடியூப் சேனலில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சக்தி ஆன்ந்தன்

ஜாமீன் கிடைத்த சக்தி ஆனந்தன் நேற்றிரவு கோவை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்த சக்தி ஆனந்தன் தனது யூடியூப் சேனலில் தலைவர் is back என தலைப்பிட்டு, வாடிக்கையாளர்களுக்கு உரிய சலுகைகள், திட்டமிட்டபடி அனைத்தும் கிடைக்கும் என்ற ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply