- பத்து நாட்களுக்கு மேலாக சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீர். நோய் தொற்று ஏற்பட்டு இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 46வது வார்டில் பாண்டியன் நகர், சுந்தரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடைப்பை சீரமைப்பு செய்யாதால் கழிவுநீர் நிரம்பி சாலைகளில் வெள்ளம் போல் ஓடுகிறது.

இதனால் இப்பகுதியில் உள்ள முதியவர்கள் – குழந்தைகள் என அனைவரும் நோய் தொற்றுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாமல், பத்து நாட்களாக மின் மோட்டார் கொண்டு கழிவு நீரை அகற்றி வருகின்றனர்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் இப்பகுதி முழுவதும் வீசுவதால் பள்ளிக்கு செல்லும் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/a-few-days-old-infant-boy-was-found-dead-in-a-plastic-water-bottle-near-pattukottai/
இதனால் தீபாவளி பண்டிகையை கூட மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றன. எனவே உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.