400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் தொடங்கியது…

2 Min Read
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்

தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைதேரோட்டம் மிக விமர்சையாக  தொடங்கியது . மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர் .

- Advertisement -
Ad imageAd image
மதுரை மீனாட்சி அம்மன்

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் மீனாட்சி அம்மனுக்கு பிரம்மாண்டமான தேர்களை செய்து கொடுத்தார் . இந்த தேர்களில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெற்றுவருகிறது . தொடர்பற்று இருந்த  மீனாட்சி கோவில் – அழகர்கோவில் விழாக்களை திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இணைத்துள்ளார். பாண்டிய நாட்டில் அப்போது நிலவிய சைவம் மற்றும் வைணவர்களுக்கு இடையேயான மோதலை தீர்க்க , மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அவர் பெரிய தேர்களை செய்து கொடுத்து அனைவரும் ஒன்றுபட்டு இழுக்கும் வகையில் வழிவகை செய்திருந்தார் . அவ்வேளையில் மக்கள் தங்களுக்குள் இருக்கும் பகையை மறந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இதனை செய்துள்ளார் .

மேலும் பெரிய சந்தைகளை அமைத்து பொருளாதார வளர்ச்சி அடையவும் இரு கோவில் விழாக்களையும் இணைத்துள்ளார் என்று வரலாற்குள் தெரிவிக்கின்றது .

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 22 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி தொடங்கியது . ஏப்ரல் 23  – மே 4 வரை மீனாட்சி அம்மனுக்கு விழாவும் , மே 1 – மே 10 வரை கள்ளழகர் கோவில் விழாவும் நடந்து வருகிறது .

கடந்த மாதம்  23  ஆம்  தேதி கொடியேற்றத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா தொடங்கியது . ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் மதுரை மாசி வீதிகளில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கப்பட்டது

பண்பாட்டின் தலைநகரமாம் மதுரை சித்திரை திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் .

திருவிழாவின் 11வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி, பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர். அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக காட்சி அளித்து வருகிறார். சிறிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். திருக்கல்யாணத்தை காணமுடியாத பக்தர்களுக்கு சுவாமியும், அம்மனும் மணக்கோலத்தில் ஊர்வலமாக கொண்டுசென்று காண்பிக்கப்படுகின்றது .

மேலமாசிவீதி, வடக்குமாசி வீதி, தெற்குமாசி வீதி,  கீழமாசி வீதி என நான்கு மாசி வீதிகளில் தேர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.  தேர் அசைந்து உலா வருவதைக்கான அதிகாலை முதலே மதுரையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Share This Article

Leave a Reply