திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனுர் எனும் இடத்தில் புறவழிச் சாலையில் பெங்களூர் நோக்கி திருவண்ணாமலையில் இருந்து சென்ற கார் தனக்கு முன்னே சென்ற மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முற்படும்போது எதிரில் திருவண்ணாமலையை நோக்கி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த எட்டு பேரில் இரண்டு சிறுவர்கள் நான்கு ஆண்கள் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலி. ஒரு பெண் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்க்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது.இந்த விபத்திற்கு என்ன காரணம் என இன்னும் அறியப்படவில்லை.எப்போது வந்தார்கள் எப்போது புறப்பட்டார்கள் என்ற விபரம் எதுவும் இன்னமும் தெரியவில்லை.தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் சில விபரங்களை சேகரித்து அவர்கள் கர்நாடக மாநிலம் என்பதை கண்டறிந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் காரில் சிக்கி இருந்த உடல்களை மீட்டு வருகின்றனர் இதில் ஐந்து பேர் உடல்கள் மீட்க பட்டு விட்டது மேலும் உள்ள இரண்டு பேர் உடல்களை மீட்கும் பணி தொடர்கிறது அனைத்து உடல்களும் மீட்கப்பட்ட பின் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உள்ளனர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இந்த எட்டு பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.