Paris Olympic 2024இல் எழுந்த சர்ச்சைகள் சிறப்பு தொகுப்பு …

2 Min Read

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய 33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை அன்று (11-08-2024) நிறைவடைந்தது.

- Advertisement -
Ad imageAd image

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டின் தகுதி நீக்கம், குத்துச்சண்டை வீராங்கனைகள் இமானே கெலிஃப் மற்றும் லின் யூ டிங் தொடர்பான பாலினச் சர்ச்சை மற்றும் ஆர்மேனியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஜோர்டான் சிலிஸிடம் இருந்து வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது போன்ற சில சர்ச்சைகள் தலைப்புச் செய்திகளாக மாறின.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் போட்டியிட்டார். ஆனால் இறுதிபோட்டி தொடங்குவதற்கு முன் அவரது எடையை அளவிடும்போது, அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட 100 கிராம் அதிகமாக எடை இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகாட் இறுதிப் போட்டிக்கு வந்ததன் மூலம் வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டது, ஆனால் அவரது 50 கிலோவுக்கு மேல் இருந்ததால் வெள்ளி பதக்கம் கூட கிடைக்கவில்லை.

பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பை எதிர்த்து களம் இறங்கிய இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி 46 வினாடிகளில் ஆட்டத்தை விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாலின தகுதிச் சோதனையில் தோல்வியுற்றதால், கடந்த ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இருந்து நீக்கப்பட்ட இரு வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதில் இமானே கெலிஃப்பும் ஒருவர்.

தைவானின் லின் யூ டிங் (இடது); அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் (வலது)

பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் அதிகம் பேசப்பட்ட இந்த சர்ச்சையைக் கடந்து இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

மற்றொருவரான, தைவான் குத்துச்சண்டை வீராங்கனை லின் யூ-டிங்கும்,போலந்து நாட்டின் குத்துச்சண்டை வீராங்கனை ஜூலியா ஸ்ஸெரெமெட்டாவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்..

இந்த பாலின சர்ச்சை அடுத்த நடக்கவிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கையும் பாதிக்கலாம், ஏனெனில் இரண்டு வீராங்கனைகளும் அதிலும் கலந்துகொள்வார்கள்.

மூன்றாவது பெரிய சர்ச்சை, அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஜோர்டான் சிலிஸ், அவர் ஆரம்பத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தார்.

பின்னர் அமெரிக்க ஜிம்னாஸ்ட் அணியின் அறிவுறுத்தலின்படி, சிலிஸின் ஸ்கோர் 13.666 லிருந்து 13.766 ஆக மாற்றப்பட்டது, இதனால் அவர் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

ஆனால் அதற்கு முன்னரே, ருமேனியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான பார்போசுவின் ஸ்கோர் 13.7 ஆக இருந்தது. இதனால் ருமேனியாவின் ஒலிம்பிக் கமிட்டி சிலிஸின் ஸ்கோரில் செய்யப்பட்ட மாற்றத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இது பின்னர் நடுவர் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் ஜோர்டான் சிலிஸிடம் இருந்து வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது.

Share This Article

Leave a Reply