செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் சோதனை – அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!

2 Min Read

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சி காலத்தில் 2011 – 2015-ம் ஆண்டு காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துக் கழகத்தில் பணி வாங்கி தருவதாகப் பணம் பெற்ற வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்க அண்மையில் உத்தரவிட்டது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை

இதை அடுத்து கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றபட்டதாகக் கூறப்பட்டது.

அப்போது சோதனையின் முதல் நாளில் திமுகவினர் திரண்டு வருமான வரித்துறை அதிகாரிகள், காரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து மத்திய பாதுகாப்பு படையினருடன் சோதனைகள் நடைபெற்றன.

அமலாக்கத்துறை அதிகாரிகள்

இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று (ஜூன் 13-ம் தேதி) 5 கார்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட அமாலக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். பின்னர் மத்திய பாதுகாப்புப் படை பெண் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் இந்த வீட்டில் தான் வசிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட திமுகவினர் சிலர் அமைச்சரின் வீடு முன்பு திரண்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள்

கரூர் மாவட்டம், மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த வீட்டிற்கு பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply