அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு முறை சம்மர் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகததால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஓட்டுநர், நடத்துனர்,மெக்கானிக் போன்ற அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார். இதற்கு அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் கார்த்திகேயன், சண்முகம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் என அமலாக்கத்துறை அதிகாரிகள் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொடர் விசாரணையில் மோசடி தொகை 1.34 கோடி ரூபாய் செந்தில் பாலாஜி வாங்கி கணக்கிலும், 29.55 லட்சம் அவருது மனைவி மேகலாவின் வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து பினாமிகள் பெயரில் 10.88 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதற்கு அசோக்குமார் மனைவி, மாமியார் ஆகியோரம் உட ந்தையாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்திருப்பதால், புழல் மத்திய சிறை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அசோக்குமாருக்கு நான்கு முறை யமுனாக்கத்துறை அதிகாரிகள் சமன் அனுப்பிய உள்ளனர் நெஞ்சுவலி என வழக்கறிஞர் வாயிலாக காரணம் கூறி வருகிறார் மேலும் ஒரு மாத கால அவகாசம் கூறுகிறார் அதை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர் வரும் 27ஆம் தேதிக்குள்ள ஒரு ஆஜராக வேண்டும் தவறினால் தேடப்படும் குற்றவாளியாக என அறிவிக்கப்பட்டு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்படும் என எச்சரிக்கை வைத்துள்ளனர் கட்டுரை அதிகாரிகள் கூறுகையில் அசோக்குமார் தலைமறைவாக இருந்து நெஞ்சு வலி எனும் பொய் சொல்கிறார் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கண்காணித்து வருகிறோம் என்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.