நீலகிரி பந்தலூர் ஏலமன்னாவில் சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடல் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இதுவரை 5-க்கும் மேற்பட்டோரை சிறுத்தை தாக்கியதில் இரண்டு பேர் இறந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியின் அருகே உள்ளது. இதனால் புலி, சிறுத்தை, கரடிகள், யானைகள், மான்கள் ஆகியவை அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித்திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை வனப்பகுதியில் அதிகரித்துள்ளதால், கூடலூர், குன்னூர், கோத்தகிரி, உதகை உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று பந்தலூர் அருகே உள்ள மேங்கோ ரேஞ்ச் எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா என்பவரது மகள் நான்சி வயது (4). அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, நேற்று காட்டு பகுதியிலிருந்து வெளியே வந்த சிறுத்தை நான்சியை காட்டிற்க்குள் தூக்கிச் சென்றது.

இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் சிறுத்தையை பின்தொடரவே குழந்தை நான்சியை சிறுத்தை தேயிலை தோட்ட பகுதியில் விட்டுச் சென்றது. குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் கூடலூர் பகுதியில் சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றது.
ஏற்கனவே சிறுத்தையை பிடிக்க ஐந்து இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு, ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை கால்நடை மருத்துவர் இருவர் வரவழைக்கப்பட்டு துப்பாக்கிகள் மூலம் மயக்க ஊசிகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களின் போராட்டத்தால், முதுமலையிலிருந்து கும்கி யானையான பொம்மன் வரவழைக்கப்பட்டு சிறுத்தையை கண்காணிக்கும் பணி என்பதற்கும் மேற்பட்ட வனத்துறையினரால் நடைபெற்றது.
தொடர் சிறுத்தை தாக்குதலால் கூடலூர் பகுதி முழுவதும் ஆறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் கூடலூர் முழுவதும் பதட்ட நிலை காணப்படுகிறது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இருவரது மரணத்தை அறிந்து வேதனை அடைந்ததாகவும், வனத்துறை சார்பில் இருவரது குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கூடலூர் உப்பட்டி அருகே உள்ள தொண்டியாளம் பகுதியில் இன்று 3:00 மணியளவில் வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தை 4 வயது ஆண் சிறுத்தை என்று மருத்துவர்கள் தெறிவித்தனர். நேற்று ஒரு டோஸ் செலுத்தியும் தப்பித்த சிறுத்தை, இன்று மேலும் ஒரு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
மேங்கோரேஞ்ச் ஆம்ப்ரஸ் என்ற இடத்தில் பிடிக்கப்பட்ட சிறுத்தை முதுமலை கொண்டு செல்லப்படுகிறது. சிறுத்தை பிடிபட்டது குறித்து முதுமலை புலிகள் சரணாலயத்தின் இயக்குனர் வெங்கடேஷ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி சிறுத்தை மூன்று பெண்களை தாக்கியது. உடனடியாக முதுமலையில் இருந்து சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தையை பின் தொடர்ந்து வருகிறார்கள்.
அதனைத்தொடர்ந்து ஜனவரி நான்காம் விளையாடிய ஒரு நான்கு வயது சிறுமியை சிறுத்தை தாக்கி இருக்கிறது. சிறுத்தையை பிடிக்க ஏற்கனவே தலைமை முதன்மை வன பாதுகாப்பு அதிகரியிடம் அனுமதி வாங்கப்படிருக்கிறது. கூண்டு வைத்து பிடிக்கவும், இல்லையெல் மயக்க மருந்து செலுத்தி பிடிக்க அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. சிறுத்தை எந்த வழியில் போகிறது வருகிறது என்பது தெரியாது.

இதுவரை எட்டு சிறுத்தைகள் பிடிக்கப்படிருக்கிறது. கூண்டு வைத்துதான் பிடிக்கப்பட்டிருக்கிறது. புலிதான் எந்த வழியில் போகின்றதோ அந்த வழியில் வரும். ஆனால் சிறுத்தை அப்படியில்லை என்றார். சத்தியமங்கலம் மற்றும் முதுமலையில் இருந்து வந்த வன மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். முதுமலை வனப்பகுதியில் விடப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் ஏலமன்னா பகுதி சேர்ந்த வடமாநிலதொழிலாளரின் 3 வயது குழந்தை நான்சி நேற்று முன்தினம் சிறுத்தை புலி தாக்கி பலியானார். இந்நிலையில் குழந்தையின் உடல் ஆனது உதகையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று சிறுமியின் உடல் ஆனது அவர்களின் சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உதகையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அங்கிருந்து ராஞ்சி வரை விமான மூலம் கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், ராஞ்சியிலிருந்து அவர்களுடைய கிராமத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை ராஞ்சியின் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தையின் உடலை அனுப்பி வைக்கும் போது பெற்றோரை ஆரத்தழுவி தன்னை மன்னித்துக் கொள்ள வேண்டும் என்றும் சம்பவத்திற்கு தன்னால் இயன்றதை செய்துள்ளேன் என்று கண்ணீருடன் பெற்றோரை வழி அனுப்பி வைத்தது நெகிழ்ச்சி ஏற்படுத்தியது. மேலும் தொண்டியால ஆறுபாடி பகுதியில் உலா வரும் சிறுத்தை புலி பிடிக்க இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டு சிறுத்தை புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.