கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை பழனி முருகன் ஜுவல்லரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூரில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு அலுவலகம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் பல்வேறு ஆவணங்கள், பென்டிரைவ், ஹார்டிஸ்க் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து தடை செய்யப்பட்ட பகுதி என நோட்டிஸ் ஒட்டிச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் 28 நாட்களுக்கு பிறகு நேற்று கரூரில், வருமானவரி துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை தொடங்கி நடத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 7 இடங்களில் சோதனை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இரவு 10 மணிவரை சோதனை மேற்கொண்டனர்.
இன்று இரண்டாவது நாளாக கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் ஜெகவர் பஜார் உள்ள பழனி முருகன் நகைக்கடையில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொடர்ந்து வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.