கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் வழக்கமாக ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போனது.
மேலும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்ததாலும், ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து 45 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டு பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில், மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தனர்.

பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பர்களை சந்திக்கப் போகும் குஷியின் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர். திருச்சி சாலை புனித பிரான்சிஸ் பள்ளியில் மாணவிகள் வரவேற்க சக மாணவிகள் பூக்கள் போல உடை அணிந்து, இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கோடை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு மோட்டு பட்லு, விக்கி மவுஸ் போன்ற குழந்தைகளை கவரி வகையில் பேண்ட் வாதியங்களுடன் பூ, சாக்லேட் கொடுத்து உற்சாகமாக நடனமாடி வரவேற்றனர்.

குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன் வேடமடைந்து குழந்தைகளை வரவேற்ற நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மேளதாளம் வாசித்தும், பாடல் பாடியும் மாணவர்களை வரவேற்றனர்.
இத்தகைய சிவப்பு கம்பள வரவேற்பால் மாணவர்கள் குஷி அடைந்து உள்ளனர். இதேபோல கோவையிலுள்ள தனியார் பள்ளிகளிலும், குழந்தைகளை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.