தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியானது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். பொதுத் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 12ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 3ம் தேதி தொடங்கி- ஏப்ரல் 3ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது. இதில் 8 லட்சம் மாணவர்கள் 3,160 தேர்வு மையங்களில் இத்தேர்வை எழுதியுள்ளனர்.இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று tnresults.nic.in என்ற அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.தமிழகத்தில் 320 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91%, மாணவிகள் 96% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில். தமிழில் 2 பேர் மட்டும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிக பட்சமாக கணக்குப் பதிவியலில் 6,573 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இயற்பியல் 800, வேதியியல் – 3100, உயிரியல் – 1500, கணினி அறிவியல் – 4800 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்” என்று கூறினார்.

தேர்ச்சி விகிதம்- 97%
மாணவியர் தேர்ச்சி -96 %
மாணவர்கள் தேர்ச்சி -91 %
மாற்றுத்திறனாளிகள் – 90 %
சிறைவாசிகள்-88 %
முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்டங்கள்
விருதுநகர்- 97 %
திருப்பூர்-96 %
பெரம்பலூர்- 95 %

மேலும் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 19 ஆம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.