தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தருமபுரி வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்ள காரில் சென்றுகொண்டிருந்தார்.அப்போது காரிமங்கலம் அருகே சென்ற போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு திடீரென நெஞ்சு வலிஏற்பட்டதால் கார் ஓட்டுனரை அருகே உள்ள மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினார் இதன் பின்னர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரியில் அரசு நிகழ்வில் இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி உடனிருந்த நிலையில்
கிருஷ்ணகிரி, ஒசூர் வழியாக பெங்களூர் நாராயண இருதாலையா மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார்..
அவருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை, பரிசோதனைக்கு பிறகு பெங்களூர் விமான நிலையம் மூலம் சென்னை புறப்பட இருப்பதாக திமுகவினர் தெரிவித்தனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு நாராயணா இருதாலையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ECG.,ECO,எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டதில் எவ்வித பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அலைச்சல் காரணமாக அவருக்கு ஓய்வு தேவை என்பதற்காக நாளை வரை மருத்துவமனையில் இருப்பார். என்றார்.
அமைச்சர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.