விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்க ஒரு 31ம் தேதி கடைசி நாள் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.10.2023 அன்று தொடங்கும் காலண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பு தோல்வி தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அந்த பதிவை தொடர்ந்து புதுப்பித்து 30.9.2023 அன்றைய தேதியில் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த பின்னர் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவி தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.12.2002 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும் இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தோல்விக்கு ரூபாய் 200 தேர்ச்சிக்கு ரூபாய் 300 மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூபாய் நான் ஒரு பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்று ரூபாய் 600 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூபாய் 600 மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூபாய் 750 பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூபாய் 1000 என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. புதிய தொகை விண்ணப்பபடிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார். இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதயத்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் வருகிற 31ஆம் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவிதொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.