திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் ஏரியில் சாலை விரிவாக்கத்திற்காக சவுடு மண் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களால் சாலையானது பாழடைந்ததை கண்டித்து வடக்கப்பட்டு ஆமூர் தடப்பரம்பாக்கம் கிராம மக்கள் மணல் லாரிகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
சென்னை எல்லை சாலை திட்டப் பணிகளுக்காக 2022 கோடி மதிப்பீட்டில் 21 கிலோமீட்டர் துறைமுகத்திலிருந்து தச்சூர் கூட்ரோடு சாலை வரை பணிகளானது நடைபெற்று வருகிறது .

இப்பணிகளுக்காக பெரும்பாக்கம் ஏரியிலிருந்து லாரிகள் மூலம் சவுடு மணல் எடுத்து செல்லப்படுகிறது இதனால் அப்பகுதியாக செல்லும் ஆமூர் , வடக்கப்பட்டு , சிங்கிளம்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது .
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
இச்சாலையானது ஒரு வருடத்திற்கு முன்பாக தான் ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை . அனால் தற்போது மணல் லாரிகளால் மிகவும் பழுதடைந்துள்ளதால் உடனடியாக சாலையை சீர் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இன்று தடப்பரம்பாக்கம் ஏரியில் மணல் அள்ளும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை அறிந்த பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் நிகழ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இச்சாலையை உடனடியாக சீர் செய்யக்கோரி உத்தரவிட்டார் .
அதன் பின்பு பொதுமக்கள் வட்டாட்சியரிடம் கூறியதாவது ஏரிகளில் இருந்து அதிகமாக சவுடு மணல் அள்ளுவதால் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது .
மேலும் கடல் நீர் கலந்து உப்பு தண்ணியாக மாறிவிட்டால் எங்களுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் இருக்காது . ஆகையால் தமிழக அரசு மேற்கோள் காட்டியுள்ள அளவிற்கு மட்டுமே மண் அல்ல வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர் . உடனடியாக வருவாய் அதிகாரிகள் மணல்லப்படும் எரிப்பகுதிகளை சென்று பார்வையிட்டனர் .
அளவுக்கு அதிகமாக மணல் அள்ளக் கூடாது எனவும் சாலை விரிவாக்க பணி புரியும் மேற்பார்வையாளரிடம் தெரிவித்தனர் . இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.