பெண் காவலர்கள் பாதுகாப்பில் சவுக்கு சங்கர்..!

1 Min Read

பெண் காவலர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று பெண் காவலர்கள் பாதுகாப்போடு திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார்.

- Advertisement -
Ad imageAd image

பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த யூடியூபர் சவுக்கு சங்கரை காவல் துறையினர் தேனியில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

சவுக்கு சங்கர்

மேலும் அவரை நேர்காணல் செய்த மற்றொரு யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டும் டெல்லியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு மீது தொடர்ந்து அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு நேற்று ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அப்போது விசாரணையை முடித்து கொண்டு சவுக்கு சங்கர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சவுக்கு சங்கரை இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோவையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்தனர்.

அப்போது பெண் காவலர்கள் குறித்து இழிவான வகையில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட நிலையில் வாகனம் முழுவதும் பெண் காவலர்கள் மட்டும் அடங்கிய பாதுகாப்பு குழுவோடு சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து வரப்பட்டார். தற்போது அந்த புகைப்படம் சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சவுக்கு சங்கர்

புகைப்படத்தில் பெண் காவலர்கள் குறித்து தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்த சவுக்கு சங்கர் கூனிக்குருகிய நிலையில் அமர்ந்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Share This Article

Leave a Reply