மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தின்படி தனிநபரோ அல்லது கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுத்தேர்தலில் அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாமல் பெற்ற, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தகுதி பெற்றவையாகும். இவ்வாறு பெற்ற தேர்தல் பத்திரங்களை தகுதியுள்ள அரசியல் கட்சி அதிகாரமளிக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே பணமாக்க முடியும்.
இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் 27-வது கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களை 03.07.2023 முதல் 12.07.2023 வரை பணமாக்குவதற்கு 29 கிளைகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு சென்னை பாரிமுனையில்,
எண் 336/166, தம்புச்செட்டித் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை முதன்மை கிளைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரத்தை முதலீடு செய்யும் அரசியல் கட்சியின் கணக்கில் அதே நாளில் வரவு வைக்கப்படும்.
Leave a Reply
You must be logged in to post a comment.