உக்ரைன், ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் இன்றோடு 400 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால் குழந்தைகள் , வயது முதிர்ந்தவர்கள் என தினமும் பல நூறுபேர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர் . ரஷியா நாட்டின் தீவிர தாக்குதலை சமாளிக்கவும் , உக்ரைன் மக்களை தற்காத்துக்கொள்ளவும் உக்ரைன் நாட்டிற்க பல நாடுகள் ஆயுதம் , பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர் .
இந்த நிலையில் ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லினை குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்யும் நோக்கத்தோடு 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப் பட்டதாகவும் அதனை ரஷியா முறியடித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது .

தாக்குதலுக்கு ஈடுபடுத்தப்பட்ட இரண்டு டிரோன்களையும் மின்சார ரேடார் மூலம் வீழ்த்தி செயலிழக்க செய்துள்ளதாக ரஷியா அரசாங்கம் தெரிவித்துள்ளது . இதன்மூலம் பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அதிபர் மாளிகைக்கு எந்த சேதாரமோ பாதிப்போ ஏற்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த தாக்குதல் முயற்சியை பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ள ரஷியா அரசாங்கம் , இதற்கு முழு பொறுப்பையும் உக்ரைன் தான் ஏற்கவேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளது .
அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதல் முயற்சியின்போது ரஷியா அதிபர் புதின் மாளிகையில் இல்லை என்றும் அவர் தலைநகர் மாஸ்கோவில் இருந்ததாகவும் ரஷியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைனின் இந்த பயங்கரவாத தாக்குதலுதுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.