மசூதிக்கு அருகே பழங்காலத்து இரும்பு பெட்டியில் புதையல் இருப்பதாக பரவிய தகவல்

1 Min Read
இரும்பு பெட்டி

குடியாத்தம் அருகே மசூதி அருகே கேட்பாரற்ற கிடந்த இரும்பு பெட்டியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

வேலூர் மாவட்டம் குடியாத்தம்,
சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இம்தியாஸ்  இவர் கவுண்டன்யா ஆற்றங்கரை அருகே ஜோதிமடம் பகுதியில் தேங்காய் நார் கம்பெனி நடத்தி வருகிறார்.

இவர் அவருக்கு சுமார் 1000 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கர் பெட்டியை அதே பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் இன்று டிராக்டரில் இறக்கியுள்ளார் இந்த நிலையில் மசூதி அருகில் மர்மமான முறையில் இரும்பு பெட்டி இருப்பதாகவும் அதில் புதையல் இருப்பதாகவும் குடியாத்தம் நகர போலீசருக்கும் வருவாய் துறையினருக்கும் சிலர் தகவல் தெரிவித்தனர்.

வருவாய் துறையினர் ஆய்வு

பின்னர் இரும்பு பெட்டியை உடைக்க வருவாய்த் துறையினர் திட்டமிட்டனர் பின்னர் சுமார் அரை மணி நேரம் போராடி பெட்டியை உடைக்க முடியாத நிலையில் பின்னர் இயந்திரம் மூலம் உடைக்க முடிவு செய்து இயந்திரம் வரவழைக்கப்பட்டு பெட்டியை அறுக்க முடியவில்லை பல மணி நேரமாக பெட்டியை உடைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து முகமது இம்தியாஸிடம் கூறும் போது  25 ஆண்டுகளுக்கு முன்பு அதை விலைக்கு வாங்கியதாகவும் தற்போது அதனை வைத்து பராமரிக்க முடியாது என்பதால் மசூதிக்கு வழங்க இங்கே எடுத்து வந்து வைத்து விட்டு சென்றதாகவும்

மேலும் அருகே உள்ள ஆற்றில் தற்போது பணிகள் நடைபெற்று வருவதால் சிலர் அதை தவறாக புரிந்து கொண்டு ஆற்றில் இருந்து எடுத்து வந்ததாக தகவல் பரவியதாகவும் தெரிவித்தார் மேலும் தற்போது பெட்டி உடைக்கும் பணியில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் குடியாத்தம் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது

Share This Article

Leave a Reply