ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்.

1 Min Read
தளவானூர் அணை

புத்தாண்டு பிறந்தது மக்கள் மகிழ்ச்சியோடு புத்தாண்டை வரவேற்றார்கள். கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் வருத்தமளிப்பதாக இருந்தாலும் கூட இனி வரும் ஆண்டுகளில் அது போல நிகழக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் ஆட்சியாளரிடம். அந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க அழுத்தம் கொடுக்கும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள். அதை புரிந்து கொள்ளக்கூடிய நிலையிலும் செயல்படுத்தக்கூடிய வகையிலும் ஆட்சியாளர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மக்களின் எண்ணம்.

- Advertisement -
Ad imageAd image
மழை வெள்ளம்

ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் பருவமழை கடந்த ஆண்டு வெள்ளம் சூழ் பகுதியாக சென்னை மற்றும் தென் தமிழகத்தின் பல மாவட்டங்களை உருகுலைத்துப் போக செய்தது. அதற்கு காரணம் மழை நீரை முறையாக சேமிக்க தவறியதுதான். நீர்நிலைகளை ஆழப்படுத்தி தண்ணீரை அதற்குள் சேமிக்கும் கடமையிலிருந்து அரசுகள் தவறி போனது. மத்திய அரசும், மாநில அரசும் உதவி செய்வதை கணக்கு பார்ப்பதுடன் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் தட்டிக் கழித்தது தான் இந்த பேரிடருக்கு காரணம். அரசியல் கட்சிகளும் கூட அதை வலியுறுத்த வில்லை.

சமூக அமைப்புகள் சொல்வதை கேட்காமல் ஒப்பந்தம் போடுவதிலே குறியாக இருக்கிற அரசாங்கம் ஒப்பந்ததாரர்கள் செய்கிற பணியினை ஆய்வு செய்வதில்லை. கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலே விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அணைக்கட்டு உடைந்தது. கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ஏரி மதகு உடைந்து. என்ன காரணம்? கேட்க வேண்டிய அரசாங்கம் மௌனம் காக்கிறது. காரணம் கமிஷன் இதையெல்லாம் எதிர்வரும் ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட்டால் தான் இது போன்ற பேரிடர்களில் இருந்து மக்களை காக்க முடியும் செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆசிரியர்.
தி நியூஸ் கலெக்ட்

Share This Article

Leave a Reply