300 கோடி ரூபாய் மோசடி வழக்கு – குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு..!

1 Min Read

தொழில் அதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் பணத்தை மோசடி செய்த முக்கிய குற்றவாளிகள் மூவரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார்.

குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு

தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும், 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளனர்.

மோசடி செய்ததை அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

ஷீலா, தீக்ஷா, சக்தி சுந்தர் மூவரும் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் மோசடியில் ஈடுபட்ட வசந்த், சிவகுமார், மற்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஷீலா, தீக்ஷா, சக்தி சுந்தர் என மொத்தம் 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதை தொடர்ந்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்

அதன் பேரில் இன்று முக்கிய குற்றவாளிகளான ஒரே குடும்பத்தை சேர்ந்த ஷீலா, தீக்ஷா, சக்தி சுந்தர் ஆகிய மூவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சுஜித் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனை அடுத்து மூவரையும் போலீசார் விசாரணைக்காக வாகனத்தில் அழைத்து சென்றனர்.

Share This Article

Leave a Reply