ஏழை பெண்களுக்கு ரூ.3 1/2 நிதியுதவி – அமைச்சர் பொன்முடி..!

2 Min Read
அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் 410 ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 31/2 கோடியில் நிதி உதவி தாலிக்கு தங்கத்தை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நா. புகழேந்தி டாக்டர் இரா. லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி கலந்து கொண்டு 410 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூபாய் 3 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை வழங்கி பேசியதாவது;

அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கிடும் வகையில் நடப்பு ஆண்டில் முதல் கட்டமாக பட்டப்படிப்பு படித்த 216 பேருக்கு 8 கிராம் தங்கம் மற்றும் தலா ரூபாய் 50 ஆயிரம் நிதி உதவியும், 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு படித்த 194 பேருக்கு 8 கிராம் தங்கம் மற்றும் தலா ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவி என மொத்தம் 410 பேருக்கு ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியில் மகளிர்க்கு கட்டணமில்லா பஸ் பயண சலுகை திட்டம், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 1000 ஊக்கத்தொகை தகுதியான மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூபாய் 1000 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு சுய தொழில் புரிந்திட மானியத்துடன் வங்கிகடன் உதவி உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு போன்ற பல்வேறு திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி

எனவே இங்கு வருகை புரிந்துள்ள அனைவரும் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதோடு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணை தலைவர் சித்திக் அலி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது அரிதாஸ், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article

Leave a Reply