திருவாரூரில் தொடர்ந்து ரவுடிகள் கைது படலம். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு.
தமிழக டி.ஜி.பி.யின் உத்தரவின் பேரில் கடந்த மூன்று தினங்களாக தமிழகம் முழுவதும் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடிப் பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றச்செயல்கள் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பிரச்சினைக்குரிய ரவுடிகள் என 40 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள், அவர்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவித்திருக்கிறார். இதனைப்படிக்க…”பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை” – இரவு நேர சைக்கிள் அணிவகுப்பு நடத்திய பெண்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி மாவட்டத்தில் தொடர்ந்து ரவுடிகள் கைது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகமான ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுபடுத்தி, பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் அவரது அதிரடி காவல் தனிப்படையினர், பல்வேறு திருவாரூரில் குற்ற வழக்குகளை தொடர்புடைய அனைத்து ரவுடிகளையும் தொடர்ந்து போலிசார் கைது செய்து வருகின்றனர். பின்னர் அதன் படி திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் மணிகண்டன் அவர்களின் சகோதரர் அரவிந்த் என்பவர் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவர் ரவுடி அரவிந்த் A+ ரவுடி ஆவார். இவரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது அணியினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.