- ரவுடி சீர்காழி சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலளார் அலெக்சிஸ் சுதாகர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த ரவுடி சீர்காழி சத்யாவை போலீசார், கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.

சத்யா மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சத்யாவின் தாய் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், தனது மகனை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்காக வேண்டுமென்றே பொய் வழக்கில் சத்யா கைது செய்யப்பட்டதாக கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் , என். செந்தில்குமார் அமர்வு, சத்யாவை குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.