உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா காலமானார். அவருக்கு வயது 40. இவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி, ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா வயது (40) சிகிச்சை பலனின்றி காலமானார்.

ராஜஸ்தான் அணி வீரர் ரோஹித் சர்மா, 2004 ஆம் ஆண்டில் சர்வீஸ் அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியின் மூலம், முதல் தர கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். கடந்த 2004 முதல் ரஞ்சிக் கோப்பையில் ஆடி வந்த ரோஹித் சர்மா, 2009 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் ஓய்வு அறிவித்தார்.

மேலும் மொத்தம் 7 ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் 12.76 சராசரியுடன், 166 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் அணிக்காக லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் 28 போட்டிகளில் 35.41 சராசரியுடன் 850 ரன்களை அடித்துள்ளார்.
இதில், இரண்டு சதம், 3 அரை சதங்களும் அடங்கும். மேலும் 14 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்காக 4 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர், அதில் 32.75 சராசரியுடன் 131 ரன்களை அடித்துள்ளார்.

ஸ்ட்ரைக் ரேட் 135.05 ஆக உள்ளது. 32.75 சராசரியில் ஆடியிருக்கிறார். லெக் ஸ்பின் வீசி, 6 விக்கெட்களை எடுத்துள்ளார். இருப்பினும், ராஜஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால், 2017-ல் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார். கடந்த 2017-ல் ஓய்வு பெற்றப் பிறகு, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பயிற்சி அகடமியை துவங்கி, பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், 40 வயதாகும் இவர், திடீரென்று காலமாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது கிரிக்கெட் அகடமியில் பயிற்சி அளித்த வந்த ரோஹித் சர்மா, திடீரென்று மயங்கி விழுந்த நிலையில், மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனை சென்றதும் சிறிது நேரத்திலேயே அவர் காலமாகிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு, சில ஆண்டுகளாகவே நுரையீரல் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.