அஞ்சுகிராமத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் சாலை : சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலை துறை..!

2 Min Read

கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள சேதமடைந்த சாலைகளால் உயிர் பலி வாங்க துடிக்கும், சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்தும், அமைச்சரின் உத்தரவுக்காக காத்திருக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இன்று அஞ்சுகிராமம் வியாபாரிகள் நல சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அஞ்சுகிராமம் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார். மேலும் ஊர்வலமாக சேதமடைந்த சாலையில் நடந்து சென்று தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை. சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.

வியாபாரிகள் நல சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த அஞ்சுகிராமம் பேருந்து நிலையம் முன்பிருந்து காவல் நிலையம் மற்றும் அப்பகுதி முழுவதும் சாலைகள் சேதமடைந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வியாபார சங்கத்தினர் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கை இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதை கண்டித்து அஞ்சுகிராமம் சந்திப்பில் வியாபாரிகள் நல சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறையை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தையும் நெடுஞ்சாலை துறையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினார். மேலும் உடனடியாக சாலையை செப்பனிட வில்லை என்றால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது அமைச்சருக்காக நெடுஞ்சாலை துறை காத்திருப்பதை கண்டித்தும், நீர் ஆதாரத்தை வீணடித்து நெற்பயிர்களை கருக வைக்கும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பப்பட்டது.

அஞ்சுகிராமம் காவல் நிலையம்

அதனை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டமானது சேதமடைந்த சாலைகளில் ஊர்வலமாக சென்று தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதில் வியாபாரிகள் நல சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் என பலர் உடனிருந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share This Article

Leave a Reply