தஞ்சை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு.

1 Min Read
  • தஞ்சை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு.

தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கரம்பை, 8 நம்பர் கரம்பை, சிவகாமிபுரம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் 8 கரம்பை பகுதி மெயின் சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இது பற்றி தகவல அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image
Share This Article

Leave a Reply