இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் ஆளுங்கட்சி தோல்வியடைந்தது. 14 ஆண்டுகளுக்கு பின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. இங்கிலாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 650 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பிரதமர் ரிஷிசுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியும்,

எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சியும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியும் மோதின. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது. சுமார் 4.6 கோடி பேர் வாக்களித்தனர். வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர்,
உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 650 இடங்களில் ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை. வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி 412 இடங்களையும், பிரதமர் ரிஷிசுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 இடங்களையும் பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் நைஜல் பரேஜ் முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிளாக்டன் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரை விட 8,000 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார் பரேஜ். இங்கிலாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி இந்த தோல்வியால் முடிவுக்கு வந்தது.
பிரிட்டன் ஆட்சியை தொழிலாளர் கட்சி பிடித்துள்ளது. அந்த கட்சியின் சார்பில் அதன் தலைவர் கியர் ஸ்டார்மர் பிரதமராக பதவி ஏற்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.