அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்க – மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்..!

2 Min Read

அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா தொடர்ந்த வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

- Advertisement -
Ad imageAd image

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்க

அப்போது, கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “முதல்வரின் கைது மக்களவை தேர்தல் நடைபெறும் போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கோட்பாடுக்கு எதிரானது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை நியாயம் அல்ல” என குறிப்பிட்டார்.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “டெல்லி முதல்வர் கைதில் எவ்வித சட்ட விரோதமும் இல்லை. அப்போது போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்க – மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்

அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? முறைகேட்டில் கெஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில் தான் தெரிந்துகொள்ள முடியும்.

அப்போது தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது” என வாதிடப்பட்டது. பின்பு இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா, மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடால் ஓத்திவைத்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்

அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர்.

டெல்லி ஐகோர்ட்

அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

Share This Article

Leave a Reply