கும்மிடிப்பூண்டியில் பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதில் திடீரென பாஜக நிர்வாகி தேசிய கொடி ஏற்றியதால் சர்ச்சை.
இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது. அப்போது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் ஏப்ரல் 19 அன்று வாக்களிப்பதற்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் என்றவுடன் மக்களுக்கு நினைவுக்கு வரும் மற்றொரு முக்கியமான விஷயம், வாக்காளர் அடையாள அட்டை.

மேலும் வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 702 பறக்கு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவித்த அடுத்த நொடியில் இருந்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பேனர்கள், கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜாரில் நிறுவப்பட்டிருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த பாஜக கொடி கம்பத்தினை அகற்ற கூடாது என எண்ணிய பாஜக நிர்வாகி அந்த கொடி கம்பத்தில் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி வைத்திருந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் பாஜக நிர்வாகியை அழைத்து தேசிய கொடியினை இறக்கி கொடி கம்பத்தினை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது பாஜகவின் கொடி கம்பத்தினை அகற்ற கூடாது என அதில் பாஜக நிர்வாகி தேசிய கொடியினை ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.