- கண்ணீர் அஞ்சலியை விழிப்புணர்வு போஸ்டராக மாற்றிய உறவினர்கள்!
குவியும் பாராட்டு!!
திருச்சி: கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கும் பேனரையே, தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு போஸ்டராக மாற்றியிருக்கிறார்கள் உறவினர்கள்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுத்த புகைப்படத்துடன், சாலை விதிகளை கவனமாக பின்பற்றாததாலும், சரியா(க)ன தலைகவசம் அணியாததாலும் ஏற்பட்ட சிறு விபத்து, மாரியப்பன் உயிரைக் குடித்துவிட்டது என்று பேனர் வைத்திருந்தது பல வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக யாராவது உயிரிழந்தால் கண்ணீர் அஞ்சலி பேனர் வைப்பார்கள், இதன் மூலம், அவர் இறந்துவிட்டார் என்று பலருக்கும் தெரிவிப்பதாகவே இது இருக்கும், ஆனால், திருச்சி மாவட்டத்தில், சாலை விபத்தில் இறந்தவரின் கடைசி நேர புகைப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு பேனராக மாற்றியிருக்கிறார்கள் அவரது உறவினர்கள்.
மாரியப்பன் (70) என்ற முதியவர், சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்தார்.
அவரது புகைப்படத்துக்கு பதிலாக, அவர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பிறகு எடுத்த புகைப்படத்தை கண்ணீர் அஞ்சலியில் சேர்க்க உறவினர்கள் முடிவி செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.