Tirupathur : குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் பலி மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

1 Min Read
உயிரிழந்த கோமதி(27)

ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்த பெண் பலி, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முற்றுகை.

- Advertisement -
Ad imageAd image

திருப்பத்தூர் மாவட்டம்,  காக்கணாம்பாளையம் ஊராட்சி சிங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் டிரைவர். சாமிக்கண்ணு.

இவரது மனைவி கோமதி(27)  இவர் நிறைமாத கற்பிணி  பிரசவத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை  காக்கணாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.

சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது பின்னர் நேற்று (17 /08 /2023 ) காலை குடும்ப கட்டுபாடு சிகிச்சைக்காக  ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

நேற்று  காலை அறுவை சிகிச்சை .

கோமதி ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக கருதிய ஆண்டிப்பனூர் மருத்துவர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கோமதி இறந்த செய்தி அறிந்த அவர்களின் உறவினர்கள் திருப்பத்தூர்  அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மனோன்மணியிடம் மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் துணை இயக்குனர்  செந்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

தவறு செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்த பெண்ணின் உறவினர்கள்   கோரிக்கை வைத்து முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவ மனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Share This Article

Leave a Reply