அமமுக பொருளாளர் மீது போலியான புகாரில் பதிவு வழக்கை திரும்பப் பெற வேண்டும் – தினகரன்

2 Min Read
டிடிவி தினகரன்

அமமுக பொருளாளர் வீரபாண்டி எஸ்.கே. செல்வம் மீது போலியான புகாரில் பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் வீரபாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் மற்றும் அவருடைய கணவர் சேகர் ஆகியோர் அளித்த பொய் புகாரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீரபாண்டி திரு.எஸ்.கே செல்வம் மீது சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் பூலாவரி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக நடைபெற்ற பைப்லைன் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய வீரபாண்டி திமுக ஒன்றியச் செயலாளர் திருமதி.வெண்ணிலாசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீரபாண்டி திரு.எஸ்.கே.செல்வம் மனைவியும் பூலாவரி ஊராட்சி மன்றத் தலைவருமான ராதா (எ) ராணி வீரபாண்டி ஒன்றிய ஆணையாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

டிடிவி தினகரன்

மக்கள் பணியை தடுத்து நிறுத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை, கழகப்பொருளாளர் வீரபாண்டி எஸ்.கே செல்வம் மீது அளிக்கப்பட்ட போலியான புகார் மீது எந்தவித விசாரணையுமின்றி அவசரம் அவசரமாக பொய் வழக்கு பதிவு செய்து மக்கள் பணியாற்றும் எதிர்க்கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளை முடக்க முயற்சிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

ஆளுங்கட்சி பிரமுகர்களால் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய தமிழக காவல்துறை, ஆளுங்கட்சியான திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு மக்கள் பிரதிநிதிகள் மீது அடக்குமுறைகளை கையாண்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

கழகப் பொருளாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வம் மீது போலியான புகாரில் பொய்யாக பதிவு செய்யப்பட்டிருக்கும்பொய்வழக்குப்பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சேலம் மாவட்ட காவல்துறையினர் மீது நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply